முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
நடிகை
ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் அதிகம்
தேடப்படும் நடிகையாக மாறிவிட்டார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு
முன்பு வெளியான அனிமல் திரைப்படத்தின் வெற்றி அவருக்கு பாலிவுட்டிலும்
நிறைய வாய்ப்புகளை தேடித் தந்துள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில்
சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும்
ராஷ்மிகா மும்பைக்கும் ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பறந்து வருகிறார். அந்த
வகையில் சமீபத்தில் மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில்
கிளம்பினார் ராஷ்மிகா. அவருடன் அடுத்த இருக்கையில் கூடவே பாலிவுட் நடிகை
ஷ்ரத்தா தாஸும் இணைந்து பயணித்தார்.
விமானம் கிளம்பி முப்பதாவது
நிமிடத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அவசர அவசரமாக மீண்டும்
மும்பை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த
நிகழ்வால் ராஷ்மிகா உள்ளிட்ட பயணிகள் சற்றே அதிர்ந்து போனாலும் இதனால்
யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து அந்த சமயத்தில்
எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராஷ்மிகா,
“அதிர்ஷ்டவசமாக சாவிலிருந்து தப்பித்தோம்” என்று கூறியுள்ளார்.